பிரிட்டன் நாட்டில் கொரோனாவிற்கு எதிராக கடந்த 2020-ஆம் வருடம் மார்ச் மாதம் நடைமுறைப்படுத்தப்பட்ட தற்காலிகமான சட்டங்கள், அடுத்த மாதம் விலக்கி கொள்ளப்படுகிறது என்று பிரதமர் அறிவித்திருக்கிறார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், நாடாளுமன்ற அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது, கொரோனாவை தடுப்பது என்பது அரசாங்கத்தின் வற்புறுத்தலின் பேரில் இருக்கும் நடவடிக்கைகள் என்பதை தனி நபரின் பொறுப்பு என்று மாற்றக்கூடிய என் திட்டத்தின் ஒரு பகுதியாக தற்காலிகமான சட்டங்கள் விலக்கப்படுகிறது.
இதனால், நம் சுதந்திரம் பறிபோகாமல் நம்மால் பாதுகாக்க முடியும். இந்த திட்டத்தின் மூலம் மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம். தற்போது இருக்கும் நடைமுறையானது, வரும் ஏப்ரல் மாதம் முதல் தேதி வரை இருக்கும்.
அதனைத் தொடர்ந்து, கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டால் சுய பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை இல்லை. கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுடன் நெருக்கமாக இருந்த நபர்களும் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான தேவைகள் முடிவடையும்.
மேலும், பொது இடங்களில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட சான்றிதழ் வைத்திருக்க வேண்டிய தேவை, ஏப்ரல் மாதம் முதல் தேதியிலிருந்து முடிவடையும். தற்போது நாட்டில் அதிகமான நோய் எதிர்ப்பு திறனும், குறைவான பலி எண்ணிக்கையும் இருக்கிறது. எனவே, தான் கட்டுப்பாடுகளை விலக்க முடிகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.