Categories
உலக செய்திகள்

பிரிட்டன் அதிபர் தேர்தல்…. லிஸ் ட்ரஸ் வெற்றி பெற 90% வாய்ப்பு… ரிஷி சுனக் பின்னடைவு…!!!

பிரிட்டன் அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருக்கும் லிஸ் டிரஸ் வெற்றியடைய 90% வாய்ப்புகள் இருப்பதாக தற்போதைய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஊழல் புகார் காரணமாக தன் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத்தொடர்ந்து நாட்டில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் பணி நடக்கிறது. அதன்படி, 11 வேட்பாளர்கள் போட்டியில் இருந்த நிலையில் மூவர் இறுதியாக வாபஸ் பெற்றார்கள்.

மீதம் இருக்கும் 8 வேட்பாளர்களில், ஒவ்வொரு சுற்றிலும் குறைவான வாக்கு பெறுபவர்கள் வெளியேற்றப்பட்டனர். அதன்படி, இறுதிப்போட்டியில் ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ் ஆகியோர் இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த தேர்தலில் இருவரில் வெற்றி பெறப்போவது யார்? என்பது குறித்த ஆய்வு ஒன்று ஸ்மார்கெட்ஸ் என்ற நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது.

இதில், லிஸ் டிரஸ் 89.29% வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அவர் தான் நாட்டின் பிரதமராக அதிக வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் ரிஷி சுனக் பின்தங்கிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |