Categories
உலக செய்திகள்

கர்ப்பிணி பெண்ணை ஆபாசமாக வர்ணித்த இளவரசர்…. அதிர்ச்சியில் அரச குடும்பம்…!!!

பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ, கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணை ஆபாசமாக பேசியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த Jeffrey Epstein என்ற கோடிஸ்வரர் சிறு குழந்தைகள் முதல் இளம் பெண்கள் வரை பலரை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. மேலும், இவருக்கும் இளவரசர் ஆண்ட்ரூவிற்கும் தொடர்பு உள்ளது என்று வெளியான செய்தி அரச  குடும்பத்தினரையும் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதன்பிறகு, ஆண்ட்ரூ மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதன்படி, தற்போது இவர், கர்ப்பமாக இருந்த ஒரு பெண்ணிற்கு மார்பகங்கள் பெரிதாக இருந்ததை ஆபாசமாக வர்ணித்திருக்கிறார். இதனால் அந்த பெண்ணிற்கு அவமானம் ஏற்பட்டது. பிரபல பத்திரிகை ஒன்றில் இது செய்தியாக வெளிவந்திருக்கிறது.

Categories

Tech |