Categories
உலக செய்திகள்

தன்னைவிட 32 வயது அதிகமானவருடன் திருமணம்.. இளவரசி டயானாவின் உறவினரான இவர்..?

பிரிட்டனின் மறைந்த இளவரசி டயானாவின் மருமகள் அவரை விட 32 வயது அதிகமுள்ளவரை திருமணம் செய்திருக்கிறார்.

பிரிட்டன் இளவரசி டயானாவின் மருமகள் லேடி கிட்டி ஸ்பென்சர். இவர் கோடீஸ்வரரான மைக்கேல் லூயிஸ் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். லேடி கிட்டி ஸ்பென்சருக்கு 30 வயதாகிறது. மைக்கேல் லூயிஸ் 62 வயதுடையவர்.

நேற்று முன்தினம் ரோம் நகரத்தில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் உறவினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள்  பங்கேற்றுள்ளனர். இதுமட்டுமல்லாமல் மைக்கேல் லூயிஸ் முன்பே திருமணமானவர். அவரது முதல் மனைவியின் மூன்று மகன்களும் திருமணத்தில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |