Categories
உலக செய்திகள்

“இளவரசர் ஹாரி-மேகனை நீதிமன்றம் வரவைப்பேன்!”.. மேகன் தந்தை ஆவேசம்..!!

பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மேகனை விரைவில் நீதிமன்றம் வரவழைப்பேன் என்று மேகனின் தந்தை ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.
பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மனைவி மேகனின் தந்தை, தாமஸ் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அப்போது அவர், சீக்கிரத்தில் என் மகள் மற்றும் அவரின் கணவர் ஹாரியை நீதிமன்றத்திற்கு வரவழைப்பேன் என்று கூறினார். அதாவது ஹாரி மற்றும் மேகன் திருமணம் நடைபெற்றபோது, தந்தையுடன் மேகனுக்கு பிரச்சனை உண்டானது.
எனவே அவர்களின் திருமணத்தில் மேகனின் தந்தை கலந்துகொள்ளவில்லை. சமீபத்தில் எனக்கு மாரடைப்பு வந்துவிட்டது. எனவே திருமணத்திற்கு வரமுடியாது என்று கூறிவிட்டார். எனினும் மணப்பெண் கையை அவரது தந்தை பிடித்து அழைத்துவர வேண்டும் என்பதால் ஹாரியின் தந்தை இளவரசர் சார்லஸ் தான், மேகனை தன் மகளாக நினைத்து தேவாலயத்திற்குள் அழைத்து வந்தார்.
எனவே ஓபரா வின்ஃப்ரேக்கு மேகன் அளித்த நேர்காணலில், என் தந்தை எனக்கு துரோகம் செய்ததாக கூறினார். அவருடன் மீண்டும் இணைவது கடினம் என்றும் கூறினார். தந்தை மற்றும் மகள் இருவரும் பிரச்சினைகளை வளர்த்துக் கொண்டே சென்றனர். இருவரும் இணைய முயற்சிக்கவில்லை.
இந்நிலையில் தாமஸ், தனக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பதால், தன் பேரக் குழந்தைகளான ஆர்ச்சி மற்றும் லிலிபெட்டை பார்க்காமலே இறந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் இருப்பதாக கூறுகிறார். எனவே தன் பேரக்குழந்தைகளை பார்க்க உரிமைக்கோரி நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடர்ந்து, ஹாரி-மேகன் மீது புகார் தெரிவிக்க போவதாக கூறியிருக்கிறார்.

Categories

Tech |