பிரிட்டன் மகாராணியின் உறவினரான இளவரசர் மைக்கேல், ஒரு தொழிலதிபரை ரஷ்ய அதிபருக்கு அறிமுகம் செய்வதற்கு அதிகமான தொகையை வாங்கியதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
பிரிட்டன் இளவரசர் மைக்கேல், ரஷ்ய அதிபரின் நெருங்கிய வட்டாரங்களுக்கு தென்கொரிய தொழில் அதிபர்களை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அதாவது இளவரசர் மைக்கேலுக்கு ரஷ்ய மொழி நன்றாகத் தெரியும் என்பதால் பிரிட்டன் ராணியின் அதிகாரபூர்வமில்லாத ரஷ்ய தூதர் என்றே கூறலாம்.
இந்நிலையில் ஒரு தொழிலதிபரிடம், அதிபர் அல்லது அவருக்கு நெருக்கமானவர்களிடம் அறிமுகம் செய்து வைப்பதற்காக சுமார் 50 ஆயிரம் பவுண்டுகள் இளவரசர் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த தொழிலதிபருக்கு ரஷ்யாவில் ஆலோசகராக பணியாற்றுவதற்கு ஒரு மாதத்திற்கு 30 ஆயிரம் பவுண்டுகள் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல் ரஷ்ய மொழியில், அந்த தொழிலதிபரின் சார்பாக உரையாற்றுவதற்கு சுமார் 1,43,000 பவுண்டுகள் பெற்றிருக்கின்றனர். இதனை வெளிப்படுத்த நினைத்த ஒரு பத்திரிக்கை, தொழிலதிபராக இளவரசரிடம் காட்டிக்கொண்டு ஒரு உரை தயார் செய்து தருமாறு கேட்டிருக்கிறது.
இதனை நம்பிய இளவரசர் மைக்கேல், கென்சிங்டன் அரண்மனை ரஷ்ய மொழியில் உரையை பதிவு செய்து தர சம்மதித்துள்ளார். இச்சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பில் இளவரசரின் அலுவலகம் செய்தி வெளியிட்டிருக்கிறது. அதில் இளவரசர் மைக்கேலுக்கு ஜனாதிபதியுடன் சிறப்பான உறவு எதுவும் இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறது.