Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மகாராணி- அதிபர் ஜோபைடன் சந்திப்பு.. அதிகாரபூர்வமாக வெளியான தகவல்..!!

பிரிட்டன் மகாராணியார், அமெரிக்க அதிபரை சந்திக்கவுள்ள தேதியை பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து Cornwall-ல் நடக்கவுள்ள ஜி-7 மாநாட்டிற்காக இந்த மாதத்தில் பிரிட்டனிற்கு வருகை தர இருக்கிறார். அப்போது பிரிட்டன் மகாராணியாரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அவர்கள் சந்திப்பிற்கான தேதி மற்றும் இடம் தொடர்பான தகவலை பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்திருக்கிறது.

ஜோபைடன், ஜி-7 மாநாட்டிற்கு பின்பு ஜூன் 14ஆம் தேதியன்று, Brusselsக்கு நேட்டோ கூட்டத்திற்காக செல்வார். அதற்கு முன்பாக அவர் தன் மனைவி ஜில்லுடன் 13ஆம் தேதி அன்று பிரிட்டன் மகாராணியாரை சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அதிபராக பொறுப்பேற்ற பின்பு ஜோ பைடன் முதன்முதலாக வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார்.

மேலும் பிரிட்டன் மகாராணியார் சந்திக்கப்போகும் 13வது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் என்பது குறிப்பிடத்தக்கது. ராணி தன் 69 வருட ஆட்சி காலத்தில் அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சனை மட்டும் சந்தித்ததில்லை. அவரின் பதவி காலத்தில் அவர் பிரிட்டனுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |