பிரிட்டன் இளவரசர் பிலிப், தன் சொத்தில் குறிப்பிட்ட தொகையை தன் இறுதி நாட்களில் உடனிருந்த உதவியாளர்களுக்கு உயில் எழுதி வைத்துள்ளார்.
பிரிட்டன் இளவரசர் பிலிப்பிற்குரிய சொத்து மதிப்புகள் சுமார் 30 மில்லியன் பவுண்டுகள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இதில் பெரும்பாலான சொத்துக்கள் அவரின் மனைவி மகாராணி யாருக்கு தான் சொந்தமாம். எனினும் மீதியிருப்பதில் குறிப்பிட்ட தொகையை இளவரசர் பிலிப் தன்னுடன் நெருக்கமாக இருந்த மூன்று உதவியாளர்கள், William Henderson, Brigadier Archie Miller Bakewell மற்றும் Stephen Niedojadlo ஆகியோருக்கு உயில் எழுதி வைத்திருக்கிறார்.
இவர்கள் மூவரும் இளவரசரின் இறுதி காலத்தில் அவருடன் இருந்து அதிகமாக உதவி செய்திருக்கிறார்கள். அதாவது இளவரசர் பிலிப்பால் சில இடங்களுக்கு செல்ல முடியாத நிலையில், Bakewell சென்று தேவையான பணிகளை மேற்கொள்வாராம். மேலும் இளவரசர் Sandringham எஸ்டேட்டில் தங்கியிருந்தால், Niedojadio மற்றும் Henderson இருவரும் மாறி மாறி அவரை கவனித்துக்கொள்வார்களாம்.
Windsor மாளிகையில் இளவரசர் இருந்த சமயத்தில், அவருடைய இறுதி இரண்டு நாட்களில் Henderson தான் உடன் இருந்தாராம்.