பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்கிங்காம் அரண்மனை நேற்று முன்தினம் பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியிட்டது. அவர் முழுமையாக தடுப்பூசி எடுத்துக் கொண்டதுடன் பூஸ்டர் தவணையும் செலுத்திக்கொண்டார். இருப்பினும் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், அவருக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும் வின்ட்சர் அரண்மனையில் இருந்து கொண்டு சிறிய பணிகளை மேற்கொள்வார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த காணொளிக்காட்சி வழியாக நடக்கும் சந்திப்புகளை அவர் ரத்து செய்துவிட்டதாகவும், சிறிய பணிகளை மட்டும் தொடர்ந்து செய்வார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.