பிரிட்டனில் ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த தலைவர்களை புகைப்படம் எடுக்கும்போது மகாராணியார் தன் குறும்பு தனத்தால் சிரிக்க வைத்துள்ளார்.
பிரிட்டனில், ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பல நாடு தலைவர்கள் வந்த போது புகைப்படம் எடுப்பதற்கு அனைவரும் தயாராக அமர்ந்திருந்துள்ளார்கள். அப்போது புகைப்படம் எடுக்க போகும் சமயத்தில் பிரிட்டன் மகாராணி, நாங்கள் அனைவரும் சந்தோசமாக இருப்பது போன்று போஸ் கொடுக்க வேண்டுமா? என்று கேட்டுள்ளார்.
இதனால் அங்கிருந்து தலைவர்கள் போஸ் கொடுக்காமல் சிரித்துள்ளனர். பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சன் மகாராணியாருக்கு அருகில் அமர்ந்திருந்தார். அவர், பார்க்க நாங்கள் சீரியஸாக இருந்தாலும் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம் என்று கூறியதும் மற்றவர்கள் சிரித்தார்கள்.
அதாவது பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு இடையே சிறிய மோதல் இருந்து வருகிறது. அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன், பிரிட்டனுக்கு ஆதரவு கொடுக்காமல் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவாக பேசினார். எனவே பிரிட்டன் கோபமடைந்தது. இப்படி பல பிரச்சனைகள் அவர்களுக்குள் இருக்கிறது. எனினும் அதனையெல்லாம் மறந்து விட்டு அனைவரும் சிரித்த காட்சிகள் புகைப்படங்களாக வெளிவந்துள்ளது.