பிரிட்டன் நாட்டின் மகாராணியாக இரண்டாம் எலிசபெத், உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பிரிட்டன் மகாராணியாருக்கு இன்று, உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு, அரண்மனையின் அதிகாரப்பூர்வ மருத்துவக்குழு சிகிச்சை அளித்து வருகிறது. மகாராணி, மருத்துவக்குழுவினரின் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்.
இங்கிலாந்து வேல்ஸ் இளவரசர், கமிலா, கேம்பிரிட்ஜ் பிரபு மூவரும் மகாராணியுடன் இருக்கிறார்கள். மகாராணிக்கு உடல்நலம் பாதித்தது நாட்டு மக்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் குணமடைய உலகத்தலைவர்கள் பிரார்த்திப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.