பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தை நினைவு கூறும் விதமாக யோர்க் நகரில் அவரின் சிலையை மன்னர் சார்லஸ் திறந்து வைத்திருக்கிறார்.
பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் கடந்த செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி அன்று மரணமடைந்தார். அதற்கு பின் முதல் தடவையாக அவரின் சிலை திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. மகாராணியார் மரணமடைவதற்கு முன் ஆறு அடி ஏழு அங்குலம் உடைய அவரின் சிலை, 70 வருட கால முடியாட்சியை சிறப்பிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டது.
இந்த சிலையை மகாராணியாரே தேர்வு செய்திருக்கிறார். செப்டம்பர் மாதத்தில் அதனை காட்சிப்படுத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் மகாராணியார் மரணம் அடைந்ததால் திறப்பு விழா தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மன்னர் சார்லஸ் யோர்க் நகரத்தில் மகாராணி சிலையை திறந்து வைத்திருக்கிறார். அப்போது அவர் இந்த சிற்பமானது மகாராணியார் நகரை பார்த்துக் கொண்டிருப்பது போன்று இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.
2 டன்கள் எடையுடைய இந்த சிலையை பிரெஞ்சு லெபைன் சுண்ணாம்புக்கல் கொண்டு ரிச்சர்ட் பாஸ்ஸன் என்னும் சிற்பக்கலைஞர் செதுக்கியிருக்கிறார்.