பிரிட்டிஷ் மருத்துவ சங்கம், பிரிட்டன் அரசின் நடவடிக்கையை கண்டித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரிட்டன் அரசு, 16 துறைகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கு தனிமைப்படுத்துதலில் தளர்வு அறிவித்திருக்கிறது. இதனை BMA எதிர்த்துள்ளது. BMA கவுன்சிலின் தலைவரான டாக்டர் சாந்த் நாக்பால் தெரிவித்துள்ளதாவது, அரசு தற்போது மேற்கொள்ளும் கொரோனா கட்டுப்பாடுகளின் திட்டம், நாட்டில் தொற்று அதிகரிக்க காரணமாகிறது.
ஒரே திட்டத்தை செயல்படுத்துவதை காட்டிலும் விரைவில் அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அரசு விழிக்க வேண்டும். அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால் தான் நாடு முழுக்க தொற்று பரவி வருகிறது. சமூக இடைவெளி கடைபிடிப்பது மற்றும் முகக்கவசம் அணிந்து கொள்வது போன்ற விதிமுறைகளை நீக்குவதற்கு இது உகந்த நேரம் இல்லை என்று BMA பல தடவை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இதன் காரணமாக தற்போது மோசமான நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். சுகாதாரப் பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க தனிமைப்படுத்துதலிலிருந்து தளர்வு அறிவிப்பது, அவநம்பிக்கை மற்றும் பாதுகாப்பு இல்லாதது. இது முக்கிய பிரச்சனையை தீர்க்கப் போவதில்லை என்று கூறியிருக்கிறார்.