ரஷ்ய நாட்டின் ஊடகங்கள் உலகப்போர் தொடங்கியதாக அறிவித்திருக்கும் நிலையில் பிரிட்டனை சேர்ந்த சிறப்புப்படைகள் உக்ரைன் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவிருக்கிறது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 50 நாட்களுக்கும் மேலாக போர் தொடுத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு முதல் தடவையாக பிரிட்டனின் சிறப்புப் படைகள் பயிற்சிகள் அளிப்பதற்கு முன்வந்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி மற்றும் ஆயுதப் பயிற்சிகளை பிரிட்டன் சிறப்புப் படைகள் வழங்க இருக்கிறது.
மேலும் பிரிட்டன் நாட்டினுடைய சிறப்பு ஆயுதங்களை வைத்து ரஷ்யாவின் ராணுவ டாங்கிகளை முற்றிலுமாக அழித்துள்ளனர். தற்போது வரை, உக்ரைன் நாட்டில் ராணுவ பயிற்சியாளர்கள் தான் போரில் களமிறங்கினர். தற்போது, அதிகாரிகளும் உக்ரைன் நாட்டில் களமிறங்கியிருக்கிறார்கள். எனினும், இதனை பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தவில்லை. மேலும் மறுப்பும் வெளியிடவில்லை.