Categories
உலக செய்திகள்

“கடும் விளைவுகளை சந்திக்க நேரும்!”….. ரஷ்யாவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த நாடு….!!!

பிரிட்டன் அரசு ரஷ்யாவிற்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளரான Liz Truss, நாடாளுமன்றத்தில் தெரிவித்திருப்பதாவது, ரஷ்யா, தன் பக்கத்து நாடுகளை சீர் குலைப்பதற்காக மேற்கொள்ளும் பிரச்சாரத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. ரஷ்யா, ஆக்கிரமிப்பு செய்வதை நியாயப்படுத்துவதற்காக, உக்ரைன் நாட்டை ஒரு அச்சுறுத்தலாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.

ரஷ்யா தான், உக்ரைன் நாட்டை ஆக்கிரமிப்பதற்கு, முயன்று வருகிறது, இனிமேல், உக்ரைன் நாட்டிற்குள் ரஷ்யா நுழைய முயற்சித்தால் கடும் விளைவுகளை எதிர்கொள்ளும். பிரிட்டன் தன் நட்பு நாடுகளுடன் சேர்ந்து, ரஷ்யா மீது பொருளாதார தடை விதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ரஷ்ய நாட்டின் அச்சுறுத்தல் நடவடிக்கையை எதிர்த்து, நேட்டோ ஒன்றிணைவது மிக முக்கியம் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |