பிரிட்டன் அரசின், பயணப் பட்டியலில் புதிய பிரிவுகளை இணைக்கும் திட்டத்தை பிரதமர் கைவிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் பிரதமர், போரிஸ் ஜான்சன் தங்கள் நாட்டின் பயணத்திட்டத்தை முடிந்த அளவிற்கு எளிதானதாக அமைக்க நினைப்பதாக நேற்று மாலையில் தெரிவித்திருந்தார். பிரிட்டன் அரசு கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவர தங்கள் நாட்டின் பயண பட்டியலில் கடுமையான விதிகளை கொண்டு வந்துள்ளது.
அதன்படி, பச்சை, அம்பர், சிகப்பு போன்றவை பட்டியலில் இருந்தது. தற்போது புதிதாக பச்சை கண்காணிப்பு மற்றும் அம்பர் பிளஸ் போன்ற வகைகளை இணைத்திருக்கிறது. இதனையடுத்து அம்பர் கண்காணிப்பு என்ற புதிய வகையையும் இந்த வார கடைசியில் இணைக்கும் திட்டம் இருந்தது.
எனினும் இத்திட்டத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் எதிர்க்கட்சியினர், ஏற்கனவே உள்ள பிரிவுகள் பல குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்று எச்சரிக்கை விடுத்தனர். மேலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில் ஐரோப்பிய நாடுகளின் அனைத்து சுற்றுலாத்துறையும் பாதிப்படையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தான் பிரதமர் அத்திட்டத்தை செயல்படுத்துவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.