Categories
உலக செய்திகள்

கொரோனாவை வென்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வீடு திரும்பினார்!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களை கொன்று குவித்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஏழை, பணக்காரர், அதிகாரிகள் என்று பாரபட்சம் காட்டாமல் கொரோனா  பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அண்மையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். இதையடுத்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு  தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.

Boris Johnson Leaves U.K. Hospital After Coronavirus Treatment ...

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவர் இருந்தாலும் செயற்கை சுவாசங்கள் அவருக்கு அளிக்கப்படவில்லை. அதற்குத் தேவையில்லை என்றும், தேவை ஏற்படவில்லை என்று தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வீடு திரும்பி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

பிரிட்டன் பிரதமர் வீடு திரும்பினாலும் அரசுப் பணியை தற்போது தொடர முடியாது என்று மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த போது போரிஸ் ஜான்சன் உடல்நிலை தேறி வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியானது. தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

Categories

Tech |