Categories
உலக செய்திகள்

‘விரைவில் தீர்வு வேண்டும்’…. பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேச்சுவார்த்தை…. வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள அமைச்சர் ஜெய்சங்கர்….!!

பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் இந்திய அமைச்சர் பயண கட்டுப்பாட்டு விதி குறித்து பேசியுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐ.நாவின் 76 வது பொதுக்கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான  ஜெய்சங்கர் கலந்து கொண்டுள்ளார். அவர் அங்கு பிரிட்டன் அமைச்சர்  எலிசபெத்தை சந்தித்துப் பேசியுள்ளார். அந்த பேச்சுவார்த்தை குறித்து வெளியுறவுத்துறை அமைச்சரான  ஜெய்சங்கர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது “பிரிட்டனின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சரை நான் சந்திக்க சென்றேன். அவர் வர்த்தகத்துறை அமைச்சராக இருந்தபோது சேவையாற்றியதற்காக அவருக்கு பாராட்டு தெரிவித்தேன். இதனையடுத்து இந்தியாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையேயான நல்லுறவை தொடர்வதற்காக 2030ஆம் ஆண்டு நோக்கி நிர்ணயிக்கப்பட்ட கொள்கைகளை இருவரும் ஆய்வு செய்தோம். மேலும் ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழல், இந்தோ பசுபிக் விவகாரம் போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம். இதுமட்டுமின்றி பயண கட்டுப்பாட்டு விதிகளில் தனிமைப்படுத்துதல் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளேன்” என்று கூறியுள்ளார்.

அதாவது கடந்த திங்கட்கிழமை அன்று பயண  கட்டுப்பாடுகளில்  மாற்றத்துடன் கூடிய பட்டியலைப் பிரிட்டன் அரசு வெளியிட்டது. அதில் இந்தியாவின்  கோவிட்ஷில்டு தடுப்பூசியை பிரிட்டன் அரசு அங்கீகாரம் செய்தது. ஆனால் இரு தவணை கோவிட்ஷில்டு தடுப்பூசி செலுத்தி கொண்டிருந்தாலும் மக்கள் பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்ட பிறகு 10 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று பிரிட்டன் அமைச்சரிடம் வெளியுறவுத்துறை அமைச்சரான  ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |