பிரிட்டனில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் தடுப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.
பிரிட்டனில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். ஆரம்பம் முதலே கொரோனா வைரசை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அலட்சியம் செய்து வந்தார். அவரது அலட்சியத்தால் தான் அதிக பாதிப்புகளை பிரிட்டன் சந்தித்து உள்ளது. பாதிப்பு அதிகமாக இருந்த செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன.
கொரோனவைரசை தடுக்கும் முயற்சியில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தோல்வி அடைந்துவிட்டார் என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில் பிரதமர் ஜான்சன் நாடாளுமன்றத்தில் பேசுகையில் கொரோனா எளிதாக இருக்கப்போவதில்லை என்று நமக்கு நன்கு தெரியும் எனக் குறிப்பிட்டார்.
வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பொது மக்கள் தங்களால் முயன்ற வரையில் வீட்டிலிருந்தே பணியைத் தொடருங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்த ஜான்சன், பார்கள், உணவு விடுதிகள் மற்றும் பிற கடைகள் இரவு 10 மணிக்கு மூடப்படும் என்றார்.