பறக்கும் டாக்ஸி அறிமுகம் செய்யவுள்ளதாக வெர்டிகல் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் வரும் 2025ம் ஆண்டுக்குள் பறக்கும் டாக்ஸி அறிமுகப்படுத்தவுள்ளதாக வெர்டிகல் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஃபிட்ஸ்பேட்ரிக் கூறியதில் ” அமெரிக்காவில் உள்ள பிளான்க் செக் நிறுவனத்துடன் டாக்ஸி தயாரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. இதனால் வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் பறக்கும் டாக்ஸி பயன்பாட்டுக்கு வரும்” என்று தெரிவித்துள்ளார். இந்த பறக்கும் டாக்ஸியில் 4 பேர் வரை செல்லலாம்.
இதனை தயாரிப்பதற்காக ஏவவான், ஹனிவெல், ரோல்ஸ்ராய்ஸ் மற்றும் மைக்ரோசாஃப்டின் எம்12 போன்ற நிறுவனங்கள் முதலீடு செய்ய முன் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த டாக்ஸியை எவ்வாறு இயக்க வேண்டும் என்பது குறித்த வழிமுறைகளை ஹீத்ரு விமான நிலையத்துடன் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.