பிரித்தானியா நாட்டில் 16 – 17 வயது உட்பட்டவர்களுக்கு இன்னும் ஒரு சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி நிபுணர்களின் பரிந்துரையின்படி பிரிட்டனில் 16 – 17 வயது உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் இன்னும் ஒரு சில வாரங்களில் போடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வயதினருக்கு Pfizer-BioNTech jab என்ற கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படும் என தடுப்பூசி மற்றும் நோய் தடுப்புக்கான கூட்டுக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து அவர்களுக்கு 2-வது தடுப்பூசி எப்போது போடப்படும் என்பது குறித்த தகவல் பின்னர் தெரிவிக்கப்படும். இதனால் சுமார் 1.4 மில்லியன் இளைஞர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு தகுதி பெற்றவர்களாக உள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து பிரிட்டனின் துணை தலைமை மருத்துவ அதிகாரியும், பேராசிரியருமான Jonathan Van-Tam கூறும்போது ,கொரோனா தடுப்பூசிகள் எங்களிடம் நிறைய உள்ளது . அதோடு தேவையான அளவு சப்ளை உள்ளது .இதனால் ஒரு சில வாரங்களில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கிவிடும் என்று நம்புவதாக அவர் கூறியுள்ளார். அதோடு நேரத்தை வீணாக்காமல் இளைஞர்களுக்கு விரைவில் தடுப்பூசி செலுத்தப்பட்டு மீண்டும் அவர்கள் கல்லூரிக்கு திரும்பும் வகையில் செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால் 12 வயது மேற்பட்ட ஒரு சில குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்பு இருப்பதால், 18 வயதை நெருங்கியவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. அதன்படி பிரிட்டனின் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட Pfizer-BioNTech கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.