Categories
உலக செய்திகள்

திருமணமான சில வாரங்களில்…. இளம் கோடீஸ்வரர் மரணம்…. பிரபல நாட்டில் நேர்ந்த துயரம்….!!

லண்டனில் இளம் கோடீஸ்வரர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர்களுடன், நெருங்கிய நட்பை கொண்டவர் இளம் கோடீஸ்வரர் Vivek Chadha(33). இவர் பல மில்லியன் பவுண்டுகளில் Nine Group என்ற, ஹோட்டல் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு 8 வாரங்களுக்கு முன்புதான், Chadha (29) என்ற பெண்ணுடன் பிரம்மாணடமான முறையில் திருமணம் நடந்தது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு, Annabel’s night club பார்ட்டியில் vivek கலந்து கொண்டார். அதன்பின், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவருடைய முகவரியில் இறந்து கிடந்தார்.

இது குறித்து பிரபல ஊடகத்துக்கு அவரின் மனைவி chada அளித்த பேட்டியில் கூறியதாவது, “நடந்தது குறித்து விவரிக்க என்னிடம் வார்த்தை இல்லை. நான் கடும் அதிர்ச்சியில் உள்ளேன். என்னால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. திருமணமாகி 8 வாரங்களில், என் வாழ்க்கை தலைகீழாக மாறியதால் மனம் உடைந்து இருக்கிறேன்” என்று வேதனையுடன் கூறினார். தற்போது, மரணத்திற்கான காரணம் கண்டறிய vivek இன் உடலை பிரேத பரிசோதனை செய்ய உள்ளனர்.

மேலும், அவருக்கு உடலில் பெரியளவில் பிரச்சனைகள் இல்லை என்று கூறப்படுகிறது. அதே சமயம் அவர் தன்னுடைய முகவரியில் இல்லாமல், வேறொரு இடத்தில் இறந்ததாகவும் தகவல் வெளியாகின்றன. இதனால் உண்மை நிலவரம் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் குடும்பத்தினருக்கு கிடைத்த தகவலின் படி, vivek மாரடைப்பால் இறந்திருக்கலாம் என நம்புவதாக அவரின் நண்பர்கள் கூறியுள்ளனர்.

மேலும், கடந்த 2015 இல் Vivek Chadha பாராளுமன்ற சதுக்கத்தில் மகாத்மா காந்தி சட்டத்திற்காக 1,00,000 பவுண்டுகள் நன்கொடை வழங்கினார். பின்னர் கடந்த 2017 இல், இளம் தொழில் முனைவோருக்கான ‘Rising Star’ விருதையும் பெற்றார். இதனை தொடர்ந்து, கடந்த 2012 இல் தனது தந்தையுடன் இணைந்து Nine Group நிறுவனத்தை தொங்கினார். குறிப்பாக, பிரித்தானியாவில் மிகப்பெரிய தனியார் ஹோட்டலில் ஒன்றாக அவரின் நிறுவனம் உள்ளது. மேலும் அவரின் 18 ஹோட்டல்களில், 800 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுவதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |