Categories
இந்தியா தேசிய செய்திகள்

“விவசாயிகள் போராட்டம்”… ஆதாரமில்லாத கருத்துகளை முன் வைக்க வேண்டாம்… பிரிட்டனுக்கு இந்தியா கண்டனம்…!!

இந்திய விவசாயிகளின் போராட்டம் குறித்து பிரிட்டன் பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்திற்கு இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய அரசாங்கம் மூன்று புதிய வேளாண் திட்டங்களை கொண்டு வந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் 3 மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் .  இந்நிலையில் பிரிட்டன் பாராளுமன்றத்தில், விவசாயிகளின் பாதுகாப்பு மற்றும் பத்திரிக்கை சுதந்திரம் குறித்து விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் இயங்கி வரும் இந்திய தூதரகம் பிரிட்டனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து இந்திய தூதரகம் கண்டன அறிக்கை ஒன்றையும்  வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் உலகில் பெரிய அளவில் செயல்பட்டு வரும் ஜனநாயகத்தின் மீதும் அதன் நிறுவனங்கள் மீதும் தவறான கூற்றுகள் முன்வைக்கப்பட்டுள்ளது . அந்த கூற்றுகளுக்கு எந்த வித ஆதாரமும் இல்லை. மேலும் பிரிட்டன் போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்த ஊடகங்கள் இந்தியாவின் டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. எனவே இந்தியாவில் ஊடக சுதந்திரம் இல்லை என்ற கேள்வியை எப்படி எழுப்ப முடிகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Categories

Tech |