பிரித்தானியாவின் பிரபல பாப் பாடகியான கிறிஸ்டி பெட்டெரில்லி நாட்டின் மிகப்பெரிய பணக்கார விவாகரத்து பெற்ற பெண்ணாக மாறியுள்ளார்.
பிரித்தானியாவில் ஸ்டரோபோஷாயர் மாகாணத்தில் பிறந்தவர் கிறிஸ்டி பெட்டெரில்லி. இவர் 1988ஆம் ஆண்டு மிஸ் யூ.கே பட்டம் பெற்றார். அதன் பிறகு லண்டனுக்கு சென்ற கிறிஸ்டி லண்டனில் பிரபலமான பாடகியாகவும் பாடலாசிரியராகவும் இருந்து வந்தார். கிரிஸ்டி கடந்த 2000 ஆம் ஆண்டு இத்தாலிய வம்சாவளியை சேர்ந்த பேர்ட்ரெல்லி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.மேலும் பேட் பேர்ட்ர்டரெல்லி உலகப் பணக்காரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கிறிஸ்டி பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்கார பெண்ணாக மாறினார். இந்த தம்பதியின் மொத்த சொத்து மதிப்பு 9.2 பில்லியன் பவுண்டுகள் ஆகும்.
கிறிஸ்டிக்கு தற்போது 50 வயதாகும் நிலையில் இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்களின் 21 ஆவது திருமண நாள் விழா உலகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு மிக பிரம்மாண்டமாக நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த தம்பதி தங்களது திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் விவாகரத்து பெற போவதாகவும் இந்த விவாகரத்துக்காக பெரும் செட்டில்மென்ட் தொகையான 350 பில்லியன் பவுண்டுகள் கிறிஸ்டிக்கு அவரது கணவரால் கொடுக்கப்படும் எனவும் தெரியவந்துள்ளது. இதன் மூலம் பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் தனிப்பட்ட சொத்து மதிப்பை விட கிறிஸ்டியன் சொத்து மதிப்பு அதிகம் என்பது தெரியவந்துள்ளது. அதேபோல் பாப் இசை கலைஞர்களிலேயே கிறிஸ்டி தான் மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ளார்.