புலம்பெயர்ந்தோருக்கு ஆயிரக்கணக்கான பவுண்டுகள் செலவில் உணவு விநியோகித்த பிரித்தானிய உள்துறை அலுவலகம்.
அட்லாண்டிக் பெருங்கடலில் பிரித்தானிய தீவு மற்றும் வடக்கு பிரான்ஸை பிரிக்கும் ஆங்கில கால்வாயை கடந்து புலம்பெயர்ந்தோர்கள் 1,185 பேர் அபாயகரமான நிலையில் கடந்த வியாழக்கிழமை சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவை அடைந்தனர். இவ்வாறு வந்த புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் சார்பில் 3,000 சிக்கன் கபாப், 100-க்கும் மேற்ப்பட்ட பீட்ஸாக்கள் மற்றும் சாதம் முதலான உணவுப்பொருட்களை வழங்கபட்டது.
இந்த சம்பவத்தில் பல ஆயிரக்கணக்கில் பவுண்டுகளை பிரித்தானிய உள்துறை அலுவலகம் செலவு செய்துள்ளது. மேலும், புலம்பெயர்ந்தோருக்கு வழங்கப்பட்ட இந்த உணவுகளை தயார் செய்ய உணவகத்தின் ஊழியர்கள் காலை முதல் மாலை வரை பரபரப்பாக இயங்கிவந்தார்கள். இதற்கு முன், புலம்பெயர்ந்தோரை எல்லைக்குள் வரவிடாமல் தடுப்பதற்காகவே பிரித்தானிய உள்துறை அலுவலகம் செலவு செய்து வந்தது.
இந்த நிலையில், பிரித்தானிய அரசின் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களும் மற்றும் பிரான்ஸ் நாட்டு அதிகாரிகளும் புலம்பெயர்ந்தோர் படகுகளை கையாளும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் பல நேரம் செலவிடப்பட்ட இந்த பணியில், 3 புலம்பெயர்ந்தோர் மாயமாகினர். தற்போது, அவர்கள் கடலில் மூழ்கி இருக்கலாம் என்ற அச்சம் நீடித்துள்ளது.