பிரித்தானியாவில் ஓட்டுனர்கள் பற்றாக்குறையால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பிரித்தானிய நாட்டில் கனரக வாகன ஓட்டுனர்களின் பற்றாக்குறையால் அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களது தேவைக்கு அதிகமாக அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரித்தானிய நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்க முடியாமல் தவிப்பதாக தெரிய வந்துள்ளது.
இது குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் கூரியதாவது, “இந்த நெருக்கடியான சூழலில் 6 பிரித்தானிய மக்களில் ஒருவர் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்க முடியாத நிலையில் உள்ளனர். மேலும் பெரும்பாலான அங்காடிகளில் இறைச்சி, பழங்கள், உறைவித்த உணவுகள் உள்ளிட்ட அனைத்தும் விற்று தீர்ந்துள்ளன.
அதோடு நாட்டின் பெரும்பாலான அங்காடிகளில் மக்கள் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் கழிப்பறை ரோல்களையே அதிகமாக வாங்கிச் செல்வதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஓட்டுனர்கள் பற்றாக்குறை தொடர்பாக அரசாங்கம் ஒருபக்கம் நடவடிக்கை முன்னெடுத்து வருகிறது. இருப்பினும் இந்த உணவு பொருள்களின் தட்டுப்பாடு வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையை பெரிதும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு தாக்கத்தால் ராணுவ வீரர்கள் தற்போது களமிறங்கியுள்ளனர். குறிப்பாக கனரக வாகன ஓட்டுனர் பயிற்சியில் 3,000 நபர்களுக்கு வாய்ப்புள்ளது. மேலும் 5,000 ஓட்டுனர்களை உடனடியாக பணிக்கு அமர்த்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றும் அரசு தரப்பு தெரிவித்துள்ளது.