பிரித்தானியாவில் பனிமூட்டம் காரணமாக அதிகாரிகள் மஞ்சள் எச்சரிக்கை அறிவித்துள்ளனர்.
பிரித்தானிய நாட்டில் கடும் பனிமூட்டம் காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டுனர்களால் சாலையில் குழப்பம் நீடிக்கும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்தின் கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு உட்பட நார்விச், லண்டன் மற்றும் கேண்டர்பரி ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது, “மூடுபனி காரணமாக வாகன ஓட்டுனர்களுக்கு சாலையில் அதிகம் கவனம் வேண்டும். வாகன ஓட்டுனர்களுக்கு பயண இடையூறுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த மஞ்சள் எச்சரிக்கையானது அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நீடிக்க கூடும். இதனால் வாகன ஓட்டுனர்களுக்கு பயண நேரம் அதிகரிக்கலாம். பேருந்து மற்றும் ரயில் சேவைகளும் தாமதமாகும். குறிப்பாக மூடுபனி காரணமாக விமான சேவையும் தாமதமாகவோ அல்லது ரத்து செய்யவோ வாய்ப்புள்ளது” என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து வருகின்ற வாரங்களில் வெப்பநிலை இன்னும் சரிவடையும் என எதிர்பார்க்க படுகிறது. மேலும் பிரித்தானியாவின் சில பகுதிகளில் அக்டோபர் அரையாண்டு விடுமுறை நாட்களில் பனியின் தாக்கம் அதிகமிருக்கும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.