Categories
உலக செய்திகள்

‘எக்ஸ்ரே எடுக்கப்படும்’…. பொய் உரைப்பவர்களுக்கான சோதனை…. பிரித்தானியா அரசின் நடவடிக்கை….!!

பிரித்தானியாவிற்குள் பொய் உரைத்து புகலிடம் வேண்டி வருபவர்களுக்கு புதுவித சோதனை நடத்தப்படுகிறது.

பிரித்தானியாவில் சிறுவர்கள் என்று கூறி புகலிடம் வேண்டியுள்ளவர்களில் 55% பேர் பொய் உரைத்துள்ளனர் என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் அலுவலகம் கண்டுபிடித்துள்ளது. குறிப்பாக  பொய்யான வயதை கூறி புகலிடம் வேண்டியுள்ளவர்களில் ஒருவர் ஈராக் நாட்டைச் சேர்ந்த அஹமது ஹுசேன். இவர் தனக்கு 16 வயது என்று கூறி புகலிடம் கோரியுள்ளார். அதிலும் இவரால் சுரங்க ரயிலில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 69 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் வயது தற்போது வரை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அஹமது நடத்திய வெடிகுண்டு தாக்குதலுக்கு அவருக்கு நீதிமன்றம் 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. குறிப்பாக இவருக்கு 18 முதல் 20 வயது வரை வயது இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இது போன்று பொய் உரைத்து ஏமாற்றியவர்களின் வயதை கண்டுபிடிப்பதற்காக தேசிய மற்றும் எல்லைகள் மசோதாவில் கொண்டுவரப்பட்ட சட்ட சீர்திருத்தங்கள் வழிவகை செய்கின்றன.

அப்பீலை அனுமதிக்க முடியாது... நிரவ் மோடியின் மனுவை தள்ளுபடி செய்தது  பிரிட்டன் ஐகோர்ட் || Tamil News, UK High Court refuses Nirav Modi's  application

அதாவது பொய் உரைப்பவர்களின் உண்மை வயதை அவர்களின் கைகளில் உள்ள எலும்பை X-Ray எடுப்பதன் மூலம் கணக்கிடலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதுபோன்ற முறையை பலநாடுகள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த முறையானது பிரித்தானியாவில் இல்லை என்பதும் உண்மையே. இத்திட்டத்தை பிரித்தானியா உள்துறைச் செயலர் பிரீத்தி பட்டேல் முன்மொழிந்துள்ளார்.

Categories

Tech |