Categories
உலக செய்திகள்

ஜேம்ஸ்பாண்ட் கார்…. பயன்படுத்தும் பிரித்தானியா இளவரசர்…. ட்விட்டரில் வெளியான கேலிக்கை சித்திரங்கள்….!!

பிரித்தானியா இளவரசர் சார்லஸ் பிரபல ஊடகமொன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

பிரித்தானியா இளவரசரான சார்லஸ் Aston Martin என்றழைக்கப்படும் பந்தயக்காரை பயன்படுத்தி வருகிறார். பொதுவாக இந்த காரானது ‘ஜேம்ஸ்பாண்ட் கார்’ என்று கூறப்படுகிறது. ஏனெனில்  பல ஆண்டுகளாக இந்தக் காரை ஜேம்ஸ்பாண்ட் 007 படத்தில் நடித்த நடிகர்கள் திரைப்படத்திற்காக  பயன்படுத்தியுள்ளனர். மேலும் இதனை சார்லஸ் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வருகிறார். குறிப்பாக சார்லஸின் 21 வது பிறந்த நாளில் அவருக்கு பரிசாக இந்த கார் வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் நாளை இந்தியா வருகை || UK Prince Charles in  India visit tomorrow Meeting with Kovind, Gurdwara Visit

 

தற்பொழுது சார்லஸ்க்கு 72 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் அண்மையில் பிரபல ஊடகமொன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது “எனது Aston Martin காரை சுற்றுப்புறச்சூழலுக்கு தகுந்தவாறு மாற்றி தரும்படி பொறியாளர்களிடம் கேட்டேன். ஆனால் அதனை அவ்வாறு மாற்றுவது சுலபமான காரியம் இல்லை என்று கூறினார்கள். இருப்பினும் முதலில் சற்று தயக்கம் காட்டிய அவர்கள் அதன் பின்பு எனது விருப்பத்திற்காக மாற்றி தந்தனர்.

மேலும் மாற்றமடைந்த அந்த காரானது பெட்ரோலில் மட்டுமின்றி சீஸ் கழிவுகள் மற்றும் வெள்ளை ஒயினின் தயாரிப்பின் போது வெளிவரும் ஒரு விதமான தவிடு போன்ற பொருளிலும் இயங்குகிறது” என்று கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து கார்பன் அதிகளவில் வெளியேறுவதை குறைப்பதற்காக பல செயல்களை செய்துள்ளார். அவரின் Balmoral எஸ்டேட்டில் தோட்டம் அமைத்திருப்பதாகவும் வாரத்தின் இரண்டு நாட்களுக்கு இறைச்சி மற்றும் மீன் உணவுகளை போன்ற உணவு பொருட்களை உண்பதையும் தவிர்த்துள்ளார்.

https://twitter.com/i/status/1447557296448548866

மேலும் வாரத்தில் ஒருமுறை பால் பொருட்கள் உட்கொள்வதையும் தவிர்த்து உள்ளதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக இளவரசர் சார்லஸ் தனது கார் பற்றி கூறிய செய்தியானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் காரானது கழிவுகளில் இயங்குவதாக கூறியதால் ட்விட்டர் பக்கத்தில் அது தொடர்பான கேலிக்கை சித்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Categories

Tech |