பிரிட்டன் அரசு, இந்திய மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் கட்டணத்தை குறைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறது.
இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பாக கொரோனா தீவிரம் அதிகமாக இருந்தது. எனவே, பல நாடுகள் இந்தியாவுடனான போக்குவரத்திற்கு தடை விதித்தது. அதன்படி, பிரிட்டன் தங்கள் பயண கட்டுப்பாட்டில் சிவப்பு பட்டியலில் இந்தியாவை இணைத்திருந்தது. எனவே இந்திய மக்கள் பிரிட்டன் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்திருக்கிறது. எனவே, பிரிட்டன் கடந்த வாரத்தில் இந்தியாவை சிவப்புப் பட்டியலிலிருந்து நீக்கியதோடு ஆம்பர் பட்டியலில் இணைத்தது. மேலும் பிரிட்டன், தங்கள் நாட்டிற்குள் வரும் பிறநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கட்டணத்தையும் குறைத்திருக்கிறது.
அதாவது பச்சை மற்றும் ஆம்பர் பட்டியலில் இருக்கும் நாடுகளிலிருந்து வரும் மக்கள் 2 டோஸ் தடுப்பூசி எடுத்திருந்தால், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கட்டணம் ரூ.6997 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு 9055 ரூபாயாக இருந்தது.