கனடாவில் வெளியான அறிவிப்பு ஒன்று எல்லை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரியாததால், பெண் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் எல்லையை தாண்டி அமெரிக்காச் சென்று அத்தியாவசியமான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று அவசரகால தயார்நிலைக்கான அமைச்சர் Bill Blair, கடந்த ஞாயிற்று கிழமை அன்று விதிவிலக்கு அளித்திருந்தார்.
எனவே Marlane Jones, ஜோன்ஸ் என்ற 68 வயது பெண், வாஷிங்டனில் இருக்கும் Blaine பகுதிக்கு சென்று எரிபொருள் வாங்கிவிட்டு வந்திருக்கிறார். அப்போது, கனடாவின் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தடுத்து, அவரிடம் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்ட ஆதாரம் இல்லாததால், தனிமைப்படுத்துதல் விதியை மீறியதாக எச்சரித்திருக்கிறார்கள்.
எனவே, Marlane ஒரு அதிகாரியிடம், அந்த கட்டுப்பாடு தற்போது மாறிவிட்டது என்று கூறியும் அதனை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும், Marlane-விடம் அதிகாரிகள் 5700 டாலர்கள் அபராதம் செலுத்துங்கள். இல்லையெனில் திரும்ப அமெரிக்காவிற்கு சென்று வாஷிங்டன் பகுதியில் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு, 72 மணி நேரங்களுக்கு பின் பரிசோதனை முடிவுகளை கொண்டுவந்து காண்பியுங்கள் என்று கூறிவிட்டனர்.
இதனால், என்ன செய்வது? என்று புரியாமல் Marlane அழுதுவிட்டார். அதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அமைச்சர் Bill Blair, அளித்த விதிவிலக்கு தொடர்பில் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் அறிந்திருக்கவில்லை. தற்போது, ஒரு பெண் இதனால் பாதிக்கப்பட்டது, தெரிய வந்தவுடன், இந்த விதி விலக்கு குறித்து சில குழப்பங்கள் உள்ளது என்பதை அமைச்சர் Bill Blair, ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், Marlane தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை திரும்பப்பெற நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.