ஜெர்மனியில், பிரிட்டன் தூதரகத்தை சேர்ந்த ஒரு ஊழியர் உளவு பார்த்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார்.
பெர்லினில் இருக்கும் பிரிட்டன் தூதரக அலுவலகத்தில் முக்கியமான ஆவணங்கள் பணம் கொடுத்து ரஷ்ய அதிகாரிகளிடம் மாற்றப்படுவது கடந்த செவ்வாய் கிழமை அன்று கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது தான் பிரிட்டன் தூதரகத்தை சேர்ந்த பணியாளர் கைதாகியுள்ளார். தற்போது அந்த நபரின் வீட்டிலும், பணியாற்றும் இடத்திலும் ஜெர்மன் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், பிரிட்டன் மற்றும் ஜெர்மன் காவல்துறையினர் சேர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு இந்த நபரை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் அந்த நபர் ஆவணங்களை, ஒரு முக்கிய நாட்டிற்கு கொடுத்ததாக தெரியவந்துள்ளது. ஆனால் எதற்காக அந்த நபர், ஆவணங்களை மாற்றினார் என்பது தெரியவில்லை. எனவே விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.