Categories
உலக செய்திகள்

தொகுதி மக்களுடனான கூட்டம்… பிரித்தானிய எம்.பி கத்திக்குத்து கொலை… வெளியான பரபரப்பு தகவல்..!!

பிரித்தானியாவில் கன்சர்வேடிங் எம்.பி சர் டேவிட் அமேஸ் தொகுதி மக்களுடனான கூட்டத்தில் பங்கேற்ற போது கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிரித்தானியாவில் Leigh-on-Sea-யில் உள்ள Belfairs Methodist தேவாலயத்தில் எசெக்ஸில் உள்ள Southend West தொகுதி எம்.பி சர் டேவிட் அமெஸ் பங்கேற்ற மக்களுடனான கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. அப்போது அந்த கூட்டத்திற்குள் நுழைந்து நபர் ஒருவர் சர் டேவிட் அமெஸ்-ஐ கத்தியால் பலமுறை குத்தியுள்ளார். அதில் பலத்த காயமடைந்த சர் டேவிட் அமெஸ்-க்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக அளிப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எம்.பி சர் டேவிட் அமெஸ் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்துள்ளார். இதையடுத்து சம்பவம் நடைபெற்ற அந்த பகுதியை சுற்றியுள்ள சாலை மூடப்பட்டதோடு, காவல்துறையினர் அப்பகுதியில் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் எசெக்ஸ் காவல்துறையினர் இந்த கொலை சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |