பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸுக்கு முன்பாக மகிழ்ச்சியான செய்தி ஒன்றை கூறுவார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பயண விதிகள் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் பிசிஆர் சோதனை தேவைகள் மற்றும் முக கவசம் அணியும் ஆணைகள் ஒரு வாரத்திற்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் வருகின்ற டிசம்பர் 18-ஆம் தேதி இந்த கட்டுப்பாடுகள் குறித்த விளக்கம் நடைபெற உள்ளது. அதுவரை “ஒமிக்ரான்” வைரஸ் மாறுபாட்டின் ஆபத்துகள் குறித்து நிபுணர்கள் ஆய்வு செய்வார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் மக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் அறிவிப்பு ஒன்றை முன்வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிரித்தானிய மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை எந்த தடையும் இல்லாமல் மகிழ்ச்சியாக தொடரலாம், கொரோனா கட்டுப்பாடுகள் கிறிஸ்துமஸ் அன்று விதிக்கப்படாது என்ற மகிழ்ச்சியான செய்தியை பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் கிறிஸ்துமஸுக்கு சில நாட்களுக்கு முன்பு பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த அறிவிப்பினை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.