Categories
உலக செய்திகள்

வெளிநாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு பரவிய 50% கொரோனாவுக்கு இந்த நாடு தான் காரணம்… வெளியான தகவல்..!!

பிரிட்டனில் வெளிநாடுகளில் இருந்து பரவிய கொரோனா தொற்றுக்கு 50% பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் தான் காரணம் என செய்திகள் வெளியாகியுள்ளது

பிரபல பிரிட்டன் பத்திரிக்கை நிறுவனமான MailOnline வெளியிட்ட செய்தியில் பிரிட்டனில்  கொரோனா  தொற்று பரவ  50 சதவீதத்திற்கு காரணம் பாகிஸ்தானிலிருந்து பிரிட்டன் வந்தவர்கள் தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 4ஆம் தேதியிலிருந்து பிரிட்டனுக்கு வந்து கொரோனாவை  பரப்பியவர்கள் 50% பேர் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இங்கிலாந்து சுகாதாரத்துறை 30 பேர் அவ்வாறு வந்துள்ளனர் என கூறியுள்ளது. பாகிஸ்தானிலிருந்து மொத்தமாக 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பிரிட்டனுக்கு வந்ததாகவும் அவர்களில் ஏராளமானோர் பிரிட்டன் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் என்றும் பிரிட்டன் பத்திரிகை நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஒரு நாளைக்கு இரண்டு விமானங்கள் பாகிஸ்தானிலிருந்து பிரிட்டனுக்கு வரும் சூழலில் சிலர் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை எடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகிறது. ஜூன் 22ஆம் தேதி ஹாங்காங் செல்லும் விமானத்தில் பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள் 30 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாரம் துபாய்க்கு பாகிஸ்தானிலிருந்து வரும் விமான சேவையை நிறுத்தியுள்ளது அந்நாட்டு அரசு. ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து பாகிஸ்தான் நாட்டின் சர்வதேச ஏர்லைன்ஸ் விமானங்கள் பிரிட்டனுக்கு வருவதும் பிரிட்டனில் இருந்து கிளம்புவதாக இருந்துள்ளது.

இரண்டு நாடுகளில் சிக்கியுள்ள மற்ற நாட்டை சேர்ந்தவர்களை அவர்களது நாட்டிற்கு கொண்டு சேர்க்க தொடங்கப்பட்ட இந்த சேவை பின்னர் தொடர்ந்து செயல்பட்டு வந்தது.சுமார் 2 லட்சம் பேர் பாகிஸ்தானில் கொரோனா தொற்றால்  பாதிக்கப் பட்டிருக்கும் நிலையில் 4000 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சூழலில் மற்ற நாடுகளிலிருந்து பிரிட்டனில் பரவிய கொரோனா தொற்று   50% பாகிஸ்தானால் தான் என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து அதிகம் அபாயத்தில் இருக்கும் நாடுகளிலிருந்து வரும் பயணிகளை கடுமையான சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |