பிரிட்டன் விமான நிலையத்தில் பயணி ஒருவர் தாமதமாக வந்து விமானத்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக செய்த செயலால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரிட்டன் East Midlands விமான நிலையத்திலிருந்து போலந்து செல்லும் விமானம் காலை 6.15 மணிஅளவில் தயாராகி கொண்டிருந்தது. இதனிடையே பயணி ஒருவர் சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் விமான பணியாளர்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பதற்காக லக்கேஜ் பரிசோதிக்க பயன்படுத்தப்படும் baggage conveyor வழியாக செல்ல முயன்றுள்ளார்.
— BTP Nottinghamshire (@BTPNotts) August 7, 2021
இதனை தொடர்ந்து தடை செய்யப்பட்ட பாதுகாப்பு பகுதிக்குள் நுழைந்த குற்றத்திற்காக கைது செய்யப்[பட்டார். இதுகுறித்து விமான செய்தி தொடர்பாளர் கூறுகையில் பயணி ஒருவர் விமான நிலையத்தில் பாதுகாப்பை மீறிய குற்றத்திற்காக விமான நிலைய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் என்றும் இந்த சம்பவத்தினால் விமான நிலையத்தில் எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.