Categories
உலக செய்திகள்

அமேசானின் புதிய திட்டம்…. பிரிட்டன் பொருளாதாரத்தை உயர்த்தும்…. அறிவிப்பு வெளியிட்ட இங்கிலாந்து வணிக செயலாளர்….!!

பிரிட்டனில் மேலும் 10,000 நபர்களை பணியமர்த்த போவதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரபல இணைய வழி பொருள் வாங்குதல் அமேசான் நிறுவனம் பிரிட்டனின் தற்போது 10,000 பேரை வேலைக்கு எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் அமேசானில் பணிபுரியும் மொத்த நபர்களின் எண்ணிக்கை 55 ஆயிரமாக உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது  இந்த அறிவிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் லண்டன், மான்செஸ்டர், எடின்பர்க், கேம்பிரிட்ஜ் ஆகிய பகுதிகள் முழுவதும் வேலை செயல்பாடுகள் இருக்கும் என தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இங்கிலாந்து வணிகச் செயலாளர் குவாசி குவார்டெங்ந்த அமேசான் அறிக்கை பிரிட்டிஷ் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என தெரிவித்துள்ளார்

Categories

Tech |