Categories
உலக செய்திகள்

இனி இந்த விதிமுறையை பின்பற்றவில்லை எனில்…. கிரிமினல் குற்றம்…. சட்டமாக்க பிரிட்டனிடம் கோரிக்கை வைக்கும் லண்டன் மேயர்….!!

லண்டன் மேயர் ரயில்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அது கிரிமினல் குற்றமாகும் என்பதை சட்டமாக்க வேண்டும் என பிரிட்டனை அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளார்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி எராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே கடந்த ஜனவரி முதல் கொரோனா தாக்கம் சற்று குறைந்து வந்ததால்  கடந்த ஜூலை 19 ஆம் தேதி முதல் கொரோனா கட்டுபாடுகள் விலக்கப்பட்டது.

இதனிடையே பேருந்து, ரயில்கள் போன்ற பொது சேவைகளில் பயணம் செய்யும்போது முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் முககவசம் அணியாமல் வருவோரிடம் அபராதம் விதிக்கப்படவில்லை அறிவுரை மட்டுமே வழங்கப்பட்டது. இந்நிலையில் இனி லண்டன் சுரங்க ரயில்களில் பயணம் செய்பவர்கள் முக கவசம் அணியாமல் பயணம் செய்தால் அது கிரிமினல் குற்றமாக பதிவு செய்யப்படும் என்ற அறிவிப்பை வழங்குமாறு பிரிட்டன் அரசை லண்டன் மேயர் சாதிக் கான் கேட்டுக்கொண்டுள்ளார்.

Categories

Tech |