பிரிட்டனில் செல்லப்பிராணிகளின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
பிரிட்டனில் நாய் திருட்டு அதிகரிப்பதால் உரிமையாளர்கள் யாரும் செல்லப்பிராணிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். சமூக வலை தளத்தில் தங்களின் விலை உயர்ந்த செல்லப்பிராணிகள் பற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடும் அதன் உரிமையாளர்கள் தங்களுக்கென்று இருக்கும் கணக்கின் Privacy Settings-ஐ சரியாக set செய்வதில்லை.
மேலும் வெளியிடும் புகைப்படங்களில் கூடுதலாக “Tags”-களையும் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் நாய்களை திருட முயற்சி செய்பவர்களுக்கு நாய் இருக்கும் இடம் எளிமையாக தெரிந்து விடுகிறது என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். சமீபத்தில் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் என்ற பகுதியில் துப்பாக்கி முனையில் பாப் ஸ்டார் Lady Gaga-வின் இரண்டு French Bulldog வகை நாய்கள் திருடப்பட்டதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் 2019-ம் ஆண்டு நாய் திருட்டு வழக்குகளின் எண்ணிக்கை 172-ஆக இருந்தது. ஆனால் தற்போது 475 நாய்கள் திருடு போயுள்ளதாக வழக்குகள் பதிவாகியுள்ளது என்று Doglost தொண்டு நிறுவனம் கூறியுள்ளது.