பிரிட்டனில் கர்ப்பிணி பெண்கள் 99% பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிரிட்டன் மகப்பேறு கண்காணிப்பு அமைப்பு ஆய்வு மேற்கொண்டதில் பிரிட்டனிலுள்ள கர்ப்பிணிப் பெண்களில் 99 சதவீதத்திற்கு அதிகமானோர் தடுப்பூசிகள் போடவில்லை என்ற தகவலை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1 மேற்கொண்ட ஆய்வில் 742 பெண்களில், 4 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதுவரை 3371 கர்ப்பிணி பெண்கள் பெண்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் அவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் டெல்டா கொரோனா தொற்றால் 10 கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.