Categories
உலக செய்திகள்

அது வேற வைரஸ்…! இது வேற வைரஸ்…. சிக்கிய பிரிட்டன்… விஞ்ஞானிகள் அதிர்ச்சி…!!

பிரிட்டனில் கொரோனா வைரஸ் மீண்டும் உருமாறியுள்ளதாகவும், அது தற்போது செலுத்தப்படும் தடுப்பூசிக்கு கட்டுப்படாது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

பிரிட்டனில்  2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் B.1.1.7 என்ற புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அது முதன் முதலில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸிலிருந்து மிகவும் ஆபத்தானது. மேலும் அதிக அளவில் பரவக்கூடியது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த  B.1.1.7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ்  பிரேசில், தென் ஆப்பிரிக்கா போன்ற பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து உருமாறிய கொரோனா வைரஸை தடுக்கும் விதமாக அனைத்து தடுப்பூசி நிறுவனங்களும்  தற்போது செலுத்தப்படும் தடுப்பூசிகளை சக்தி வாய்ந்த தடுப்பூசிகளாக மாற்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் உலகிற்கு மீண்டும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக கொரோனா வைரஸ் மேலும் உருமாற்றம் அடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

சமீபத்தில் லட்சக்கணக்கான மக்களின் மாதிரிகள் சேகரிப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் பிரிஸ்டலில் 11 பேருக்கும் லிவர்பூல் பகுதியில்  32 பேருக்கும் இந்த உருமாறிய  கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.தற்போது கொரோனாவுக்கு எதிராக செலுத்தப்படும் தடுப்பூசிக்கு இந்த உருமாறிய கொரோனா வைரஸ் கட்டுப்படாது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |