பிரிட்டனில் செல்லப்பிராணிகளை திருடுபவர்களுக்கு புதிய சட்டம் அமல்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரிட்டனில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் இருந்து மக்கள் பொழுது போக்கிற்காகவும் மன அமைதிக்காகவும் செல்லப்பிராணிகளை அதிக அளவு வாங்க தொடங்கியதால் விற்பனை அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து செல்லப்பிராணிகளின் தேவை அதிகரித்ததால் அதன் விலையும் இரு மடங்கானது. இதனிடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக செல்லப்பிராணிகளின் திருட்டும் அதிகரித்தது.மேலும் விலை உயர்ந்த நாய்கள் அதிக அளவில் நடத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் புதிய பென்ஷன் சட்டம் அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதில் செல்லப் பிராணிகளுக்கும்உணர்வுகள் உள்ளதால் அவற்றை திருத்துவது புதிய சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய கிரிமினல் குற்றம் என்றும் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்டவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக செல்லப்பிராணிகள் வீட்டு விலங்குகளான தொண்டு நிறுவனங்களுடன் ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.