பிரிட்டனில் முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் இன்னும் சில வாரங்களில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்தி கொண்டவர்கள் அடுத்த மாதத்திலிருந்து தனிமைப்படுத்துதல் மற்றும் கொரோனா பரிசோதனை போன்றவற்றை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும், விரைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் வகையான திட்டங்களை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா தடுப்பூசியின் போட்டுக் கொண்டவர்கள் மற்றும் கொரோனா பாதிக்கப்பட்டவரின் தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோர் தினமும் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்ற திட்டத்தை அனுமதிக்க அமைச்சர்கள் அனைவரும் இந்தத் திட்டத்தில் கையெழுத்திட இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள Exeter பல்கலைக்கழகத்தில் தொற்றுநோய் நிபுணர் Dr Bharat Pankhania முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு தனிமைப்படுத்துதல் இருந்து விலக்கு அளித்தது சரியான முடிவுதான் என்று தெரிவித்துள்ளார்.