Categories
உலக செய்திகள்

“1 பிளேட் பிரியாணி” 6 பேர் உட்கார்ந்து சாப்பிடலாம்…. விலை ரூ.20000 மட்டும் தானாம்…!!

தங்க தட்டில் பரிமாறப்படும் பிரியாணி ரூ.20000 க்கு விற்கப்படுவது அனைவரையும் ஆச்சர்யத்திற்குள்ளாக்கியுள்ளது.

நம்முடைய நாட்டை தாண்டியும் உலகம் முழுவதும் பிரியாணிக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அப்படி மனதில்  நிற்கக்கூடிய பிரியாணியை ருசிப்பதே அவ்வளவு மனநிறைவு. நமது வாழ்வில் பலவகையான பிரியாணியில் சேர்த்து சாப்பிட்டிருப்போம். ஆனால் உலகிலேயே விலை உயர்ந்த பிரியாணியை சுவைத்தது உண்டா? அது என்ன உலகிலேயே மிகவும் உயர்ந்தது என்று கேட்கலாம். துபாய் துபாயில் ஒரு தட்டு பிரியாணி நம் நாட்டு பண மதிப்பின் படி 20,000 ரூபாய்க்கு விற்று வருகிறது ஒரு ஹோட்டல்.

இது கேட்கும்போது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் இந்த பிரியாணியை துபாயில் உள்ள ஒரு முக்கிய ஹோட்டல் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாகவே உலகிலேயே அதிக விலையுள்ள பிரியாணியாக அழைக்கபடுகின்றது. இந்த பிரியாணியை துபாயில் உள்ள பம்பாய் போரோ என்ற உணவகம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த பிரியாணியை ஒருவர் மட்டுமே சாப்பிட வேண்டியது அவசியம் கிடையாது. பிரியாணி அதிகமாக இருக்கும் என்பதால் ஆறு பேர் சேர்ந்து இந்த பிரியாணியை சாப்பிடலாம்.

இந்த பிரியாணி 63 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட தட்டில் பரிமாறப்படுவதாக கூறப்படுகிறது. காஷ்மீரி மட்டன் கபாப், பழைய டெல்லி மட்டன் சாப்ஸ், ராஜ்புத் சிக்கன் கே கபாப்ஸ், முகலாய் கேஃப்டே மற்றும் மலாய் சிக்கன் ஆகியவை அடங்கியுள்ளன. இந்த உணவகம் சென்று பிரியாணி ஆர்டர் செய்து 40 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியது இருக்கும். எனவே நீங்கள் துபாயில் வசிப்பவர் என்றால் இந்த பிரியாணியை சாப்பிட முயற்சி செய்து பார்க்கலாம்.

Categories

Tech |