அவரைக்காய் புளிக்குழம்பு
தேவையான பொருட்கள் :
அவரைக்காய்- கால் கிலோ
பெரிய வெங்காயம்- 2
தக்காளி- 3
பச்சை மிளகாய்- 2
மல்லித்தழை-1 கொத்து
கறிவேப்பிலை-1 கொத்து
சாம்பார் தூள் -1 டேபிள் ஸ்பூன்
புளிச்சாறு -1 கப்
மிளகாய் தூள்- அரை டேபிள் ஸ்பூன்
சோம்பு தூள்- 1 டீஸ்பூன்
மிளகுத் தூள்- 1 டீஸ்பூன்
சீரகத் தூள்- 1 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கேற்ப
எண்ணெய- தேவைக்கேற்ப
செய்முறை :
அவரைக்காய், வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை நறுக்கி வைக்கவும். புளியை கரைத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சிறிது ஊற்றி அவரை, தக்காளி, மஞ்சள் தூள், மிளகுத் தூள், சீரகத் தூள், உப்பு, மல்லித்தழை போட்டு கலந்து 30 நிமிடம் வேக விடவும். பின்பு புளிக்கரைசலை ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம் போட்டு வதக்கவும். சோம்பு தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். தாளித்தவற்றை அவரை குழம்பில் ஊற்றவும்.
சுவையான அவரைக்காய் புளிக்குழம்பு தயார். இதில் இறால், கருவாடு சேர்த்தால் கூடுதல் ருசி கிடைக்கும்.
சூடான சாதத்திற்கு மிக ஏற்ற உணவு.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதம்.