Categories
உலக செய்திகள்

கொடூர கொரோனா… வலது காலை இழந்த பிரபல நடிகர்…!

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பிராட்வே நடிகர் நிக் கோர்டரோவின் வலது கால் துண்டிக்கப்பட்ட பின் குணமடைந்து வருகின்றார் என்று அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

டோனி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் நட்சத்திர நடிகர் நிக் கோர்டரோ (Nick Cordero). கனடாவை சேர்ந்த இவர் 2 வாரங்களுக்கும் மேலாக கொரோனா வைரஸின் பிடியில் சிக்கித் தவித்து போராடி வருகிறார். அவரது மனைவி  அமண்டா க்ளுட்ஸ் அடிக்கடி ரசிகர்களுக்கு கணவரின்  உடல் நிலை குறித்த தகவல்களை தன்னுடைய  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டு வருகின்றார். கொரோனா வைரஸுடன் போராடி கொண்டிருக்கும் கோர்டோ 18ஆவது நாள் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக கடந்த சனிக்கிழமை க்ளூட்ஸ்  தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.

அப்போது அவர் கூறுகையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது  அவரது வலது காலில் இரத்த உறைதல் பிரச்சனைகளை காட்டத்தொடங்கினார். மேலும், அவரது கால் விரல்களுக்கு ரத்தம் வர முடியவில்லை. ரத்த உறைதல் பிரச்சனைகளை சரிசெய்ய அவருக்கு கிடைத்த ‘பிளட் தின்னர்கள்’ அவரது இரத்த அழுத்தத்தை பாதித்து, குடலில் உட்புற  ரத்தப்போக்கு ஏற்படுவதாக அவர் கூறினார்.

மேலும் ரத்த உறைதலுக்கு மருத்துவர்கள் ‘பிளட்தின்னர்கள்’ வைத்திருந்தனர். ஆனால் துரதிஸ்டவசமாக ‘பிளட் தின்னர்கள்’ மற்ற சிக்கல்களை ஏற்படுத்தின. அதனால் அவரது வலதுகால் இன்று துண்டிக்கப்படும் என்று அவர் கூறினார்..

Categories

Tech |