Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணன் தளபதிக்கு செம துணிச்சல்..! உறுதியாக உடன் நிற்போம்… DMKவுக்கு நம்பிக்கை கொடுத்த திருமா ..!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், உதயநிதி அவர்கள் தலைமையிலான இளைஞர் அணியின் சார்பில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடக்கிறது. இவையெல்லாம் திமுக கழகம் எவ்வாறு தாம் கொண்ட கொள்கையில் இருந்து நழுவாமல்,  வலுவாமல் சமூக நீதிப் பாதையில் இயங்குகிறது. அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்ற முழக்கத்தை தந்தாரே கலைஞர்,

ஆதிக்கத்தை எதிர்ப்போம் என்று முழக்கத்தை தந்தாரே அந்த வழியில் இன்றைக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் நழுவாமல், வலுவாமல் இயங்குகிறது. பெரியாரின் வாரிசாக தான் இன்னும் நாங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறோம். இது எளிய மக்களுக்கான அரசு, சமூக நீதிக்கான அரசு, இங்கே சனாதனத்திற்கு இடமில்லை, ஒருபோதும் அனுமதியோ இது சிறுபான்மை மக்களுக்கான பாதுகாப்பு அரணாக இருக்கின்ற,

விளங்குகின்ற அரசு என்பதை இன்றைக்கு ஊருக்கு உலகுக்கு உணர்த்தக்கூடிய வகையில் துணிவாக ஆட்சியை வழிநடத்திக் கொண்டிருப்பவர் தான் அண்ணன் தளபதி அவர்கள். ஆகவே இவருடைய தலைமை என்பது திடீரென வந்த தலைமை அல்ல, இரத்த வழி வாரிசு என்கின்ற அடிப்படையில் வந்த தலைமையல்ல, கொள்கை நெருப்பில் புடம் போட்ட ஒரு வாரிசாக..

பெரியாரியத்தை உள்வாங்கிக் கொண்ட ஒரு தலைமையாக, சமூக நீதியை பாதுகாக்க கூடிய வல்லமை பெற்ற ஒரு பேராண்மையாக… தளபதி அவர்கள் விளங்குகிறார். அதனால் தான் விடுதலை சிறுத்தைகளும், அண்ணன் ஜவாஹிருல்லா போன்றவர்களும் நாங்கள் உடன் இருக்கிறோம் என்றைக்கும் உடன் இருப்போம் என்கின்ற உறுதியை தந்து நிற்கிறோம் என தெரிவித்தார்.

Categories

Tech |