Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இறப்பிலும் இணை பிரியாதவர்கள்…. அண்ணன் தம்பி பாசம்…. சோகத்தில் மூழ்கிய கிராமம்….!!

அண்ணன் இறந்த துக்கத்தில் தம்பியும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள திரளி கிராமத்தில் பெரிய கோட்டையன்-பூச்சியம்மாள் என்ற தம்பதி வசித்து வந்தனர். இந்நிலையில் பெரிய கோட்டை உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் இறந்துள்ளார். இதுகுறித்து அவருடைய தம்பியான செட்டி ராமன் என்பவருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலின் பேரில் அவர் தனது அண்ணன் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு தனது அண்ணண் இறந்த நிலையில் இருப்பதை கண்டதும் அவர் அழுது புலம்பியுள்ளார். பின்னர்  ஓரமாக அமர்ந்திருந்த செட்டி ராமன் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதனால் அண்ணன் இறந்த துக்கம் தாளாமல் தம்பியும் இருந்துள்ளது அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |