Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாதகமாக வழங்கிய தீர்ப்பு…. குடும்பத்தினருக்கு நடந்த விபரீதம்…. சகோதரர்கள் கைது…!!

சொத்து பிரச்சனையில் குடும்பத்தினரை சகோதரர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆயிரம்விளக்கு பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும், இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஹரி பிரசாத் மற்றும் அவரது சகோதரர் அருண் ஆகியோருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் மணிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் ஹரி பிரசாத் மற்றும் அருண் ஆகியோர் மணியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து விட்டனர்.

இதனையடுத்து அவர்கள் மணி, அவரது மனைவி சரசு, மகன் மகேஷ் ஆகியோரை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதனால் படுகாயம் அடைந்த 3 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஹரி பிரசாத் மற்றும் அருண் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |