சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த சகோதரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தலைவன்வடலி பகுதியில் ஆத்தூர் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் பாலத்தில் காவல்துறையினர் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சகோதரர்களான காளிமுத்து மற்றும் மாரிமுத்து என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது.
மேலும் அவர்கள் அப்பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்ததும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்பின் சகோதரர்கள் இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 35 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.